Homemade butter in Tamil – தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பது எப்படி

Homemade butter in Tamil – தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பது எப்படி
Homemade butter in Tamil – தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பது எப்படி

This page describes how to make homemade butter in Tamil in a simple way. Using Hand blender / Mixer instead of old ‘ Mathu ‘ is a trendy and easy way to prepare your butter as well as healthy buttermilk.

தயிரிலிருந்து வெண்ணெய் எடுப்பதற்கு முன்பெல்லாம் ‘ மத்து ‘ பயன்படுத்துவார்கள். அந்த முறையில் சிறிது அதிக நேரம் செலவிட வேண்டி வந்தது. இப்பொழுது அந்த முறை சிறிது மாறி மிக்ஸியிலோ அல்லது blender இல் தயிரை ஊற்றி மிக குறைவான நேரத்தில் அழகாக வெண்ணெய் எடுத்து விடலாம். கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் வெண்ணெய் எடுக்கும் முறை காண்பிக்கப் பட்டுள்ளது.

1. ஒரு நாள் தயிரிலிருந்து எடுக்கும் வெண்ணெய் மிக குறைவாகவே இருக்கும். ஆகையால் தினமும் உறைந்த தயிரின் மேலே படியும் ‘ஆடை’ யை எடுத்து பிரிட்ஜில் சேர்த்து வைத்து விடுங்கள். 1 கப் அல்லது 2 கப் அளவு வந்தவுடன் வெண்ணெய் எடுக்கலாம்.

2. இவ்வாறு  சேர்த்து வாய்த்த ‘ஆடையை ‘ ஒரு உயரமான பாத்திரத்தில் போட்டு ப்ளெண்டர் ( blender ) உபயோகித்து முதலில் அடர்த்தியான க்ரீம் பதத்திற்கு கொண்டு வரவும். பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக் கொண்டே  ப்ளெண்டரை உபயோகிக்கவும். 2 முதல் 3 நிமிட உபயோகத்திற்கு பின் வெண்ணெய் திரண்டு வர ஆரம்பிக்கும்.

3. தண்ணீர் அதிகமாக சேர்க்க சேர்க்க வெண்ணை திரண்டு வரும் வேகம் அதிகரிக்கும்.

4. இவ்வாறு சேர்த்த வெண்ணெயை அப்படியே எடுத்து பிரிட்ஜில் வைக்காமல், தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து விட்டால் நெய் தேவைப்படும் சமயம் எடுத்து உருகிக் கொள்ளலாம்.

 

Written by: Kannathal chinniah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>