Mutton masala recipe in Tamil – seivathu eppadi

Mutton masala recipe in Tamil – seivathu eppadi
Mutton masala recipe in Tamil – seivathu eppadi

This mutton masala is a delicious and simple South Indian recipe. In this recipe you do not need so many ingredients except the most wanted. Tamil video of this recipe is embedded below.

காரமான மட்டன் மசாலா எப்படி செய்வது என்ற செய்முறை இந்த தமிழ் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்

மட்டன் – 3/4 kg

வெங்காயம் – 2

வெள்ளை பூண்டு – 10 no.

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 1

பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 tsp

மிளகாய் தூள் – 3/4 tbsp

மல்லி தூள் / தனியா – 1 tbsp

சோம்பு தூள் – 1/2 tbsp

சீரக தூள் – 1/2 tbsp

மஞ்சள் தூள் – 1/5 tsp

சோம்பு – 1 tsp ( தாளிப்பதற்கு )
……

…….

மட்டன் மசாலா எப்படி செய்வது

1. ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து வெடித்து வந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிவக்கும் வரை கிண்டவும்.

2. மசாலா தூள்களை போட்டு 30 வினாடிகள் கிண்டியவுடன் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

3. பின் மட்டன் , உப்பு சேர்த்து கிளறவும். மட்டனிலிருந்து தண்ணீர் இப்பொழுது வெளியே வர ஆரம்பிக்கும். அந்த தண்ணீரின் அளவை பார்த்து, பின் வேக வைக்க வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து 20 முதல் 25 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும் ( பின்குறிப்பு பார்க்கவும் )

4. நன்றாக வெந்தவுடன் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து கிண்டி விட்டு பின் மல்லி போட்டு இறக்கவும். இதே முறையில் சிக்கன் மசாலாவும் செய்யலாம்.

5. சுவையான தென்னிந்திய மட்டன் மசாலா ரெடி.
……

……

பின்குறிப்பு

மட்டன் வேக வைக்கும் பாத்திரத்தை பொறுத்து வேக வைக்கும் நேரத்தின் அளவு மாறுபடும். குக்கரில் வேக வைத்தால் 5 ,6 விசில் சத்தம் வரை வைக்க வேண்டும். நன்றாக ஆறிய பின் குக்கரை திறந்தால்தான் மட்டன் வெந்திருக்கும். பாத்திரத்தில் வேக வைத்தால் இளம் கறியாக இருந்தால் 25 முதல் 30 நிமிடத்திலும், முற்றினதாக இருந்தால் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரையும் வேகும்.

Written by: Kannathal chinniah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>