Palkova recipe in Tamil – Milk halva seivathu eppadi

Palkova recipe in Tamil – Milk halva seivathu eppadi
Palkova recipe in Tamil – Milk halva seivathu eppadi

Learn how to make palkova. Tamil video  of this recipe describes the steps clearly. Now let us make yummy milk halva / halwa…..

Tamil video

Ingredients

Milk  – 1/2 liter( to make paneer ),

Milk – 3/4 liter,

Cardamom pdr (ஏலக்காய் தூள் ) – 1/2 tsp,

Cashews – 10 to 12,

Ghee – 1/2 tsp,

Lemon juice – 1/2 to 1 tsp,

Sugar – 1/2 cup ( to taste ).

பால்கோவா செய்வது எப்படி

1. முதலில் பன்னீர் எடுப்பதற்கான பாலில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும் ( பின் குறிப்பு பார்க்கவும், பி.கு 1 ). இதை கொதிக்க வைக்கவும். கொதித்துக் கொண்டு வரும் பொழுதே எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும் ( பி.கு 2 ). இப்பொழுது பாலிலிருந்து பன்னீர் பிரிந்து வர ஆரம்பிக்கும். முழுவதும் பிரிந்தவுடன் ஒரு வடிகட்டியில் வெள்ளை துணியை பரப்பி திரிந்த பாலை ஊற்றி பன்னீரை தனியாக பிரிக்கவும். பிரித்த பன்னீரை உதிரியாக ரவை போல் உதிர்த்து வைக்கவும்.

2. மற்றொரு கனமான பாத்திரத்தில் 3/4 லிட்டர் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து நன்றாக வற்ற வைக்க வேண்டும். இடையிடையே தூர் பிடிக்காமல் இருக்க கிண்டிவிட்டுக் கொள்ளவும். 25 முதல் 30 நிமிடம் தேவை படும்.

3. ஒரு கடாயில் நெய் 1/2 tsp ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும். வறுபட்டவுடன் உதிர்த்து  வைத்த பன்னீர் போட்டு கிண்டவும். பன்னீர் போட்ட 30 வினாடிகளில் கண்டிப்பாக தீயை நிறுத்தி விட வேண்டும் ( பி.கு 3 ). ( இங்கே கோதுமை அல்வாவை முயற்சிக்கலாம் )

4, இப்பொழுது வற்றிக் கொண்டிருக்கும் பால் 1 கப் வரை வற்றி குறைந்த பிறகு சீனி, ஏலக்காய் தூள் கலந்து  அடுப்பை நிறுத்தி விட்டு ( பி.கு 4 ) பின் பன்னீர் , முந்திரி சேர்த்து கலந்தால் சுவையான பால் கோவா ரெடி.

பின் குறிப்பு 1,2,3,4

1. பாலில் தண்ணீர் சேர்ப்பதால் பன்னீரை வடிகட்டுவது எளிதாக இருக்கும்.

2. எலுமிச்சை சாறு அதிகமாகி விட்டால் பன்னீர் சிறிது புளிப்பாக இருக்கும். பால்கோவாவின் சுவை வேறுபாடும்.

3. பன்னீரில் எஞ்சி உள்ள ஈரப் பதத்தை எடுப்பதற்காக முந்திரியுடன் சேர்த்து வறுக்கிறோம். அதிக நேரம் வறுத்து விட்டால் பன்னீர் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.

4. எலுமிச்சை ரசம் சேர்த்து செய்த பன்னீரை எலுமிச்சை சேர்க்காத வற்றிய பாலுடன் சேர்க்கும் பொழுது வற்றிய பாலும் சேர்ந்து பன்னீராக தெரியக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அடுப்பை நிறுத்திவுடனோ அல்லது வற்றிய பால் நன்றாக ஆறியவுடனோ பன்னீர் முந்திரி கலவையை சேர்க்க வேண்டும்.

Palkova recipe in Tamil – Milk halva seivathu eppadi






    Ingredients
  • Milk – 1/2 liter( to make paneer ), Milk – 3/4 liter, Cardamom pdr ( elakkai thool ) – 1/2 tsp, Cashews – 10 to 12, Ghee – 1/2 tsp, Lemon juice – 1/2 to 1 tsp, Sugar – 1/2 cup ( to taste ).
    Directions

Please Rate This RecipeRating

 

Written by: Kannathal chinniah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>